/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையோர வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்
/
சாலையோர வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்
சாலையோர வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்
சாலையோர வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்
ADDED : டிச 03, 2025 07:24 AM
கோவை: தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து சாலையோர வியாபாரிகள், ஹோட்டல், பேக்கரிகளில் உணவு கையாள்பவர்களுக்கு, மருத்துவ பரிசோதனை மற்றும் டைபாய்டு தடுப்பூசி செலுத்த, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை திட்டமிட்டுள்ளது.
எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தர விதிமுறைகளின் படி, ஹோட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவு சார்ந்த இடங்களில் உணவு கையாள்பவர்கள் கட்டாயம், மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டியதும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியதும் அவசியம்.
தொடர்ந்து அறிவுறுத்தல்கள், உத்தரவுகள் வழங்கப்பட்டதே தவிர, அதை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் தொடர்ந்தன.
கோவை மாவட்டத்தில் கடந்த ஜூனில், 867 சாலையோர வியாபாரிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி மருத்துவச்சான்று வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தவும், நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், '' உணவு சார்ந்த துறைகள் எதுவானாலும் உணவு தயாரிப்பு, பரிமாறுபவர்கள் என உணவை கையாள்பவர்கள் கட்டாயம் டைபாய்டு தடுப்பூசி செலுத்திக்கொள்வதும், முறையான மருத்துவ பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழ்களை உரிமையாளர்கள் பராமரிக்க வேண்டியதும் அவசியம்.
சாலையோர வியாபாரிகள், ஹோட்டல், பேக்கரிகளில் உணவு கையாள்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
''கலெக்டர், உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர், செயலர் அனைவரின் ஆலோசனை பேரில், தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்படுத்தவுள்ளோம்,'' என்றார்.

