/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரண்டு மாதமாக வீண்; சாக்கடையில் கலக்கிறது குடிநீர்
/
இரண்டு மாதமாக வீண்; சாக்கடையில் கலக்கிறது குடிநீர்
இரண்டு மாதமாக வீண்; சாக்கடையில் கலக்கிறது குடிநீர்
இரண்டு மாதமாக வீண்; சாக்கடையில் கலக்கிறது குடிநீர்
ADDED : ஜன 08, 2024 10:43 PM

அன்னுார்:பொகலுாரில் குழாய் உடைப்பால், இரண்டு மாதங்களாக பல ஆயிரம் லிட்டர் குடிநீர் தினமும் வீணாகிறது.
மேட்டுப்பாளையம், பவானி ஆற்றில் இருந்து, பொகலுார் வழியாக அன்னுார், அவிநாசி, திருப்பூருக்கு இரண்டாம் குடிநீர் திட்டம் மற்றும் வழியோர கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் செல்கின்றன.
இதில் பொகலுாரில் சாலையின் தெற்கே இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால், தினமும் பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீணாக சாலை ஓரத்தில் சென்று சாக்கடையில் கலக்கிறது. வீணாகும் குடிநீர் நீண்ட தொலைவிற்கு சாலையை அரித்து செல்கிறது.
இங்கு ஏழு அல்லது எட்டு நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் சப்ளையாகி வருகிறது. இந்நிலையில் இரண்டு மாதங்களாக குடிநீர் வீணாக சாக்கடையில் கலப்பது குறித்து பொகலுார் ஊராட்சி நிர்வாகத்திடமும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
'விரைவில் குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்,' என பொகலுார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.