தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வீடுகளில் குடிநீர் மீட்டர் ரீடிங்கில் குழப்பம்! கணக்கு புத்தகம் தந்தால் சரியாகும்

வீடுகளில் குடிநீர் மீட்டர் ரீடிங்கில் குழப்பம்! கணக்கு புத்தகம் தந்தால் சரியாகும்

வீடுகளில் குடிநீர் மீட்டர் ரீடிங்கில் குழப்பம்! கணக்கு புத்தகம் தந்தால் சரியாகும்


ADDED : நவ 11, 2026 03:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2026 03:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் 24 மணி நேர குடிநீர் திட்டத்தில், கட்டணம் நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்படுவதால், பழையபடி ரோஸ் கலர் கணக்கு புத்தகம் போட வேண்டுமென்கின்றனர் பொதுமக்கள்.

மாநகராட்சியில் 60 வார்டுகளில் 24 மணி நேர குடிநீர் திட்டம் செயல்படுத்தும் பணி நடந்து வருகிறது. இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. குடிநீர் சப்ளை செய்வது, மீட்டர் கணக்கெடுப்பது, கட்டண பட்டியல் தயாரித்தல், நுகர்வோரிடம் கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பணிகளை சூயஸ் நிறுவனம் செய்கிறது.

குடிநீர் கட்டணம் விதிப்பதில் முரண்பாடு ஏற்பட்டு வருகிறது. மாமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் படி வசூலிக்காமல், மாநகராட்சியும், சூயஸ் நிறுவனமும் செய்துள்ள ஒப்பந்தப்படி கட்டணம் விதிக்கின்றனர். குறைந்த அளவு குடிநீர் பயன்படுத்தி இருந்தால், நாள் கணக்கு அடிப்படையில் வசூலிப்பதாக, முதல்வருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது.

இச்சூழலில், பீளமேடு பகுதியில் கடந்த மாதம் கொடுத்த கட்டண பட்டியலில், இதற்கு முன் 200 ரூபாய் செலுத்திய இணைப்புகளுக்கு ரூ.5,000 வரை கட்டணம் வந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். சூயஸ் நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர்.

‘மீட்டர் பொருத்தி இருந்தாலும், பழைய இணைப்பு துண்டிக்காததால், குடிநீர் ‘ரிவர்ஸ்’ சென்றிருக்கிறது. மீட்டர் வழியாக சென்றதால் அளவீடு அதிகரித்தது. கட்டணம் உயர்ந்திருக்கிறது. வீட்டு வளாகத்துக்குள் நடந்திருப்பதால், அக்கட்டணம் செலுத்தியாக வேண்டும்’ என மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

‘புதிதாக மீட்டர் பொருத்தும்போது, அதன் வழியாக மட்டுமே குடிநீர் வரும் வகையில் குழாய் இணைப்பு வழங்க வேண்டும். பழைய இணைப்பை துண்டிக்க வேண்டும். அதன் வழியாக தண்ணீர் வரவோ அல்லது செல்லவோ கூடாது. பழைய இணைப்பை துண்டிக்காமல் விட்டது மாநகராட்சி நிர்வாகத்தின் தவறு. தவறை ஏற்க அதிகாரிகள் மறுக்கின்றனர்’ என குற்றம் சுமத்துகிறார், ம.தி.மு.க. மாமன்ற குழு தலைவர் சித்ரா.

‘இதற்கு முன், குடிநீர் அளவீடு எடுக்கும்போதே, எத்தனை லிட்டர் பயன்படுத்தினோம் என்பதை வெளிப்படையாக அறியும் வகையில், ஒவ்வொரு வீட்டுக்கும் ரோஸ் கலர் புத்தகம் வழங்கப்பட்டிருந்தது. மீட்டர் ரீடிங் எடுக்க வரும் மின் ஊழியர் அட்டையில் எழுதிக் கொடுப்பது போல், குடிநீர் மீட்டர் ரீடிங் எடுக்க வருபவர் புத்தகத்தில் எழுதிக் கொடுப்பார். மாநகராட்சி வரி வசூல் மையத்துக்குச் சென்று கட்டணம் செலுத்தப்படும். 2 மாதத்துக்கு ஒரு முறை, குடிநீர் எவ்வளவு பயன்படுத்தினோம் என்பதை வெளிப்படையாக அறிய முடிந்தது.

தற்போது அப்படி அல்ல. மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ். வருகிறது. பின், குடிநீர் கட்டண பட்டியல் என சின்ன துண்டு சீட்டு வழங்குகின்றனர். அந்த தாளை பத்திரப்படுத்தி வைத்திருக்க முடியாது. ஏனெனில், வங்கி ஏ.டி.எம்.களில் வரும் ரசீது போல், அந்து துண்டு சீட்டில் உள்ள தகவல்கள் சில நாட்களில் அழிந்து விடுகின்றன.

அதனால், குடிநீர் கட்டணம் தொடர்பான ஆதாரம் மக்களிடம் இருப்பதில்லை. ஏற்கனவே இருந்த நடைமுறை போல் ஒவ்வொரு இணைப்புக்கும் ரோஸ் கலர் குடிநீர் புத்தகம் மீண்டும் வழங்க வேண்டும். வீடு வீடாக மீட்டர் ரீடிங் எடுப்பவர்கள், கட்டணத்தை எழுதிக் கொடுக்க வேண்டும்’ என்கிறார் அ.தி.மு.க. மாமன்ற குழு தலைவர் பிரபாகரன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us