/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீண்டும் குடிநீர் பிரச்னை: தீர்வு காண வலியுறுத்தல்
/
மீண்டும் குடிநீர் பிரச்னை: தீர்வு காண வலியுறுத்தல்
மீண்டும் குடிநீர் பிரச்னை: தீர்வு காண வலியுறுத்தல்
மீண்டும் குடிநீர் பிரச்னை: தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : அக் 17, 2025 11:20 PM
நெகமம்: நெகமம் அருகே உள்ள கப்பளாங்கரைக்கு, கே.வி.கே., நகரில் உள்ள நீருந்து நிலையத்தில் இருந்து, 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
சரி வர குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், கடந்த மார்ச் மாதம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போதும், இப்பிரச்னை நிலவுகிறது. ஆனால், கப்பளாங்கரையில் உள்ள நீருந்து நிலையத்தில் இருந்து, மெட்டுவாவி, வடசித்தூர், பனப்பட்டி, பெரியகளந்தை, மன்றாம்பாளையம் ஆண்டிபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படுகிறது.
எனவே, கப்பளாங்கரை நீருந்து நிலையத்திலிருந்து வழங்கினால் உபயோகமாக இருக்கும். இதை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.