/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாடு
/
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாடு
ADDED : செப் 07, 2025 09:11 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ஒன்றியத்திலுள்ள, 34 ஊராட்சிகளில், 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிகளுக்குட்பட்ட பெரும்பாலான கிராமங்களில் இன்றளவும், சீரான குடிநீர் விநியோகம் இல்லை.
சில கிராமங்களில் இரு வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கின்றனர். இதனால் மக்கள் பலர் குடிநீரை காசு கொடுத்து வாங்குகின்றனர். குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஒன்றிய நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே போர்வெல் அமைக்கப்பட்டு, உவர்ப்பு தண்ணீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, கிராமங்களில் குடிநீர் பிரச்னையை தீர்க்க, கிணத்துக்கடவில், இடத்தை தேர்வு செய்து நீரேற்று நிலையம் அமைக்க வேண்டும் என, கடந்த 2023ல், ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், மாவட்ட கலெக்டர், கூடுதல் கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், எம்.பி., உள்ளிட்டவர்களிடம் வலியுறுத்தினார்கள்.
மேலும், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் நடந்த முகாம்களில் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டியும் மனு அளிக்கப்பட்டது. ஆனால், மாவட்ட கலெக்டர் முதல் ஒன்றிய அதிகாரிகள் வரை அனைவரும் மாறியதால், பிரச்னைக்கு தீர்வுகிடைக்காமல் உள்ளது.