/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலியோவை ஒழிக்க சொட்டு மருந்து முகாம்
/
போலியோவை ஒழிக்க சொட்டு மருந்து முகாம்
ADDED : மார் 04, 2024 12:44 AM

கோவை:நேற்று மாவட்டத்தில், 1,585 இடங்களில், அமைக்கப்பட்டிருந்த முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
காலை 7:00 முதல், மாலை 5:00 மணி வரை நடந்த முகாம்களுக்கு, பொதுமக்கள் ஆர்வமுடன் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்தனர்.
வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வரும் குழந்தைகளுக்காக, 34 சிறப்பு முகாம்கள், 24 நடமாடும் ஊர்திகள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
மாநகராட்சி பகுதிகளில், 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 45 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள், 14 நடமாடும் போலியோ சொட்டு மருந்து முகாம் உட்பட, 351 இடங்களில் நேற்று முகாம் நடந்தது. இதில், மாநகராட்சி பொது சுகாதார துறை அலுவலர்கள், பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் என, 1,482 பேர் பணியில் ஈடுபட்டனர்.
'தினமலர்' அலுவலகத்திலும்...
கோவை சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள 'தினமலர்' நாளிதழ் அலுவலகத்தில், பல ஆண்டுகளாக, போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை, 7:00 மணிக்கு சிறப்பு முகாம் துவங்கியது.
பெற்றோர், முகாமுக்கு ஆர்வமுடன் வந்து தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை போட்டுக் கொண்டனர். மாலை 5:00 மணி வரை நடந்த முகாமில், 451 குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

