/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொட்டுநீர் பாசனத்தில் சாகுபடி பணிகள் தீவிரம்
/
சொட்டுநீர் பாசனத்தில் சாகுபடி பணிகள் தீவிரம்
ADDED : ஜூலை 09, 2025 10:03 PM

நெகமம்; நெகமம், பெரியகளந்தை பகுதியில் உள்ள விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய நிலத்தை உழுது சொட்டு நீர் பாசனம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நெகமம் அருகே, பெரியகளந்தை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் பலர் பயிர்கள் சாகுபடி செய்ய நிலத்தை உழவு செய்துள்ளனர். அதில், சொட்டு நீர் உபகரணங்களை பொருத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயி அருள்ராஜ் கூறுகையில், ''நேந்திரன் நாட்டு ரக வாழை, 3 ஏக்கரில் நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதனுடன் ஊடுபயிராக தக்காளி நடவு செய்ய உள்ளோம்.
இதற்கு முதற்கட்டமாக, நிலத்தை உழவு செய்து மற்றும் சொட்டு நீர் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இப்பணிகள் நிறைவு பெற்றவுடன், முதலில் தக்காளி நடவும், அதை தொடர்ந்து வாழைக்கன்று நடவும் செய்ய உள்ளோம்,'' என்றார்.