/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொட்டுநீர் பாசன பராமரிப்பு தோட்டக்கலைத்துறை விளக்கம்
/
சொட்டுநீர் பாசன பராமரிப்பு தோட்டக்கலைத்துறை விளக்கம்
சொட்டுநீர் பாசன பராமரிப்பு தோட்டக்கலைத்துறை விளக்கம்
சொட்டுநீர் பாசன பராமரிப்பு தோட்டக்கலைத்துறை விளக்கம்
ADDED : மே 24, 2025 05:56 AM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு, சொட்டுநீர் பாசன பராமரிப்பு முறைகள் குறித்து தோட்டக்கலைத் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், தென்னை, காய்கறி மற்றும் பழ வகை பயிர்கள் என, 17 ஆயிரம் ஹெக்டேர் அளவில், விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலான விவசாயிகள் சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்துகின்றனர்.
சிலர், சொட்டுநீர் பாசனத்தை முறையாக கடைப்பிடிக்காததால், விளைச்சலில் பாதிப்பு ஏற்படும் நிலை உண்டாகிறது. இதை தவிர்க்க தோட்டக்கலை துறை சார்பில் சொட்டுநீர் பாசன பராமரிப்பு முறைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
இதில், ஒவ்வொரு நாளும் பயிருக்கு நீர் பாய்ச்சுவதற்கு முன், மோட்டார் பம்பை இயக்கி ஐந்து நிமிடங்கள் வரை நீரோட்டத்தை எதிர் திசையில் முழு அழுத்தத்துடன் பாய்ச்சுவதால், மணல் வடிகட்டியில், சிறிய அளவிலான குப்பை அல்லது அழுக்கு தேங்கி இருந்தால், நீரோட்டத்தில் வெளியேற்றப்படும்.
திரை வடிகட்டியின் வலை அல்லது தட்டு வடிகட்டி மூடியை திறந்து, அதில் குவிந்திருக்கும் குப்பையை சுத்தம் செய்ய வேண்டும். சொட்டுநீர் பாசன முறையில், சொட்டுவானில் இருந்து நீர் வெளியேறியவுடன், நிலம் முழுதும் சொட்டுவான்கள் வேலை செய்கிறதா, நீரின் அழுத்தம் சரியாக இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும், என, தெரிவித்தனர்.