/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொட்டு நீர் பாசனம் மானியம்; தோட்டக்கலைத்துறை அழைப்பு
/
சொட்டு நீர் பாசனம் மானியம்; தோட்டக்கலைத்துறை அழைப்பு
சொட்டு நீர் பாசனம் மானியம்; தோட்டக்கலைத்துறை அழைப்பு
சொட்டு நீர் பாசனம் மானியம்; தோட்டக்கலைத்துறை அழைப்பு
ADDED : ஜூலை 30, 2025 08:51 PM
சூலுார்; மானியத்தில், தானியங்கி சொட்டு நீர் பாசன அமைப்பை பெற்று, பயனடைய, சூலுார் வட்டார விவசாயிகளுக்கு, தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
சூலுார் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஷர்மிளா அறிக்கை:
விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல், விவசாயிகள் திண்டாடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், மானிய விலையில், தானியங்கி சொட்டு நீர் பாசன அமைப்பு வழங்கப்படுகிறது.
பின்னேற்பு மானியமாக, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, 22 ஆயிரம் ரூபாயும், பெரிய விவசாயிகளுக்கு, 18 ஆயிரம் ரூபாயும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், சிறு, குறு விவசாய சான்று, நில வரைபடம், ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் , சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு, 0422 - 2990014 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.