/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்த காயங்களுடன் டிரைவர் சடலம்; போலீசார் விசாரணை
/
ரத்த காயங்களுடன் டிரைவர் சடலம்; போலீசார் விசாரணை
ADDED : செப் 21, 2024 05:56 AM
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள மத்தம்பாளையம் அல்லிநகரம் பகுதியில் போர்வெல் லாரிகளை நிறுத்துவது வழக்கம். இப்பகுதியை சேர்ந்த சந்திரசேகர், லாரியை நிறுத்திவிட்டு நேற்று காலை வந்து பார்த்தபோது, இவருடைய லாரிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி அருகே காரமடை, மேடூர், சாலவேம்பு பகுதியைச் சேர்ந்த டிரைவர் நந்தகுமார், 46, தலையின் பின்பக்கம் பலத்த ரத்த காயம், இடது கண்ணில் காயமடைந்த நிலையில் இறந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து லாரி உரிமையாளர் மாணிக்கம், பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தான் ஓட்டி வந்த லாரியின் கேபினின் மேல் பகுதியில் படுத்து இருந்த டிரைவர் நந்தகுமார், தவறி கீழே விழுந்து தலையின் பின் பகுதியில் பலத்த அடிபட்டு இறந்திருக்கலாம் என, தெரியவந்தது.
இருந்தாலும், உடல் கூறாய்வு அறிக்கைக்கு பின்னரே டிரைவர் நந்தகுமார் மரணத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என, போலீசார் கூறினர்.