/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி., கால்வாய் நீரில் மூழ்கி டிரைவர் பலி
/
பி.ஏ.பி., கால்வாய் நீரில் மூழ்கி டிரைவர் பலி
ADDED : ஏப் 01, 2025 10:33 PM
நெகமம்,; நெகமம், உதவிபாளையம் அருகே, பி.ஏ.பி., கால்வாயில் தவறி விழுந்த டிரைவர், நீரில் மூழ்கி இறந்தார்.
மடத்துக்குளத்தைச் சேர்ந்தவர் ஹபீஸ் ரகுமான், 22, டிரைவர். இவர், ரம்ஜான் பண்டிகைக்கு, மூலனூரில் உள்ள உறவினரை பார்க்க வந்தார்.
அப்போது, உதவிபாளையம் பி.ஏ.பி., கால்வாய் அருகே அமர்ந்து நண்பர்களுடன் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இவரது மொபைல்போனுக்கு அழைப்பு வர, போனில் பேசியபடி கால்வாய் கரையில் அமர்ந்திருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக, ஹபீஸ் ரகுமான் கால்வாயில் தவறி விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இது குறித்து, நெகமம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் ஹபீஸ் ரகுமானை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று, சுல்தான்பேட்டை அருகே பச்சார்பாளையம் பகுதியில் கால்வாயில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.

