/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்வாயில் கவிழ்ந்த கார்; காயத்துடன் தப்பிய டிரைவர்
/
கால்வாயில் கவிழ்ந்த கார்; காயத்துடன் தப்பிய டிரைவர்
கால்வாயில் கவிழ்ந்த கார்; காயத்துடன் தப்பிய டிரைவர்
கால்வாயில் கவிழ்ந்த கார்; காயத்துடன் தப்பிய டிரைவர்
ADDED : மே 27, 2025 12:13 AM

கோவை; ஆட்டோ மீது மோதி சாக்கடை கால்வாயில் கார் கவிழ்ந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக டிரைவர் தப்பினார்.
கோவையில், கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தில் நேற்று காலை சென்று கொண்டிருந்த ஒரு கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, அப்பகுதியில் வந்த ஆட்டோ மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி ரோட்டோரம் இருந்த சாக்கடை கால்வாயில் கவிழ்ந்தது. காருக்குள் சிக்கிக் கொண்ட டிரைவர், வெளியே வர முடியாமல் திணறினார். தகவல் அறிந்து வந்த, பீளமேடு தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் தலைமையிலான வீரர்கள், டிரைவரை பத்திரமாக மீட்டனர்.
லேசாக காயம் அடைந்திருந்த அவர், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிங்காநல்லுார் போலீசார் விசாரணையில், காரை ஓட்டி வந்தது கேரள மாநிலம், ஆலுவாவை சேர்ந்த மணிகண்டன் எனத் தெரிந்தது. கிரேன் மூலம் கால்வாயில் விழுந்த கார் மீட்கப்பட்டது.