/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமி பலாத்கார வழக்கில் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை
/
சிறுமி பலாத்கார வழக்கில் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை
சிறுமி பலாத்கார வழக்கில் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை
சிறுமி பலாத்கார வழக்கில் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 01, 2025 12:14 PM
கோவை:
சிறுமி பலாத்கார வழக்கில், லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை, திருச்சி ரோடு, காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன்,36; லாரி டிரைவான இவர், சுந்தராபுரம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வசித்து வந்தார்.
அப்போது, 15 வயது சிறுமியை மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்துள்ளார்.
2018,ஏப்., 7ல் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, முருகேசனை கைது செய்து, கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.
விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றம் சாட்டப்பட்ட முருகேசனுக்கு, 10 ஆண்டு சிறை, 20,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.