/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்சோ வழக்கில் டிரைவருக்கு சிறை
/
போக்சோ வழக்கில் டிரைவருக்கு சிறை
ADDED : ஜன 11, 2025 08:56 AM
கோவை : சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், டிரைவருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை, குனியமுத்துார், சுண்டக்கமுத்துார் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்; 65, டிரைவராக பணியாற்றிய இவர், 14 மற்றும் 16 வயதுள்ள சிறுவர்களை பள்ளியில் இருந்து, அவரது வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்தார்.
புகாரின் பேரில், 2014, டிச., 27ல், தெற்கு பகுதி மகளிர் போலீசார் விசாரித்து, பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர். அவர் மீது கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி குலசேகரன், பாலசுப்பிரமணியத்திற்கு, 12 ஆண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

