/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டிவி' சத்தத்தை குறைக்கக்கோரிய டிரைவர் கொலை; குற்றவாளி கைது
/
'டிவி' சத்தத்தை குறைக்கக்கோரிய டிரைவர் கொலை; குற்றவாளி கைது
'டிவி' சத்தத்தை குறைக்கக்கோரிய டிரைவர் கொலை; குற்றவாளி கைது
'டிவி' சத்தத்தை குறைக்கக்கோரிய டிரைவர் கொலை; குற்றவாளி கைது
ADDED : ஏப் 02, 2025 08:51 AM
கோவை; திண்டுக்கல் மாவட்டம், மணியாரம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் ஆறுமுகம், 35; போத்தனுார் செட்டிப்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இவருடன் கேரள மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த சியாஸ், 35 என்பவரும் தங்கிருந்தார்.
கடந்த 25ம் தேதி இரவு, இருவரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். மது போதையில் சியாஸ், டி.வி.,யில் அதிக சத்தம் வைத்து, பாடல் கேட்டுக்கொண்டிருந்தார். துாங்க வேண்டும் என்பதால், பாட்டு சத்தத்தை குறைக்குமாறு ஆறுமுகம் கேட்டுள்ளார். ஆனால் சியாஸ் சத்தத்தை குறைக்காமல் இருந்துள்ளார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், தகராறாக மாறியது. ஆத்திரம் அடைந்த சியாஸ், மது பாட்டிலை உடைத்து ஆறுமுகத்தை சரமாரியாக குத்தினார். பலத்த காயம் அடைந்த ஆறுமுகத்தை, அருகில் இருந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சியாஸ் அங்கிருந்து தப்பினார்.
சுந்தராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சியாசை தேடி வந்தனர். அவர் கேரள மாநிலம், ஆலுவா பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின்படி, போலீசார் அங்கு சென்று கைது செய்தனர்.