ADDED : பிப் 02, 2026 04:58 AM
நெகமம்: திருப்பூர் வீதம்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 44, டிரைவர். இவரது மனைவி மகேஸ்வரி செஞ்சேரி பிரிவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். மகேஸ்வரி தினமும் வேலைக்கு பஸ்சில் சென்று வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், மோகன்ராஜ்க்கு விடுமுறை என்பதால் மகேஸ்வரியை பைக்கில் அழைத்து சென்ற போது, செட்டிகாளிபாளையம் அருகே எதிர் திசையில் பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த கார், பைக் மீது மோதியது. விபத்தில் காயமடைந்த மோகன்ராஜ், மகேஸ்வரியை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். இதில், மருத்துவமனை செல்லும் வழியில் மோகன்ராஜ் இறந்தார்.
போலீஸ் விசாரணையில், காரை ஓட்டி வந்தது திருப்பூரை சேர்ந்த சுப்ரமணியம் என்பது தெரியவந்தது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
