தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ‘108’ ஆம்புலன்ஸ் டிரைவருக்கு மிரட்டல்  விடுத்த டிரைவர் கைது 

‘108’ ஆம்புலன்ஸ் டிரைவருக்கு மிரட்டல்  விடுத்த டிரைவர் கைது 

‘108’ ஆம்புலன்ஸ் டிரைவருக்கு மிரட்டல்  விடுத்த டிரைவர் கைது 


ADDED : செப் 29, 2026 06:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 06:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ‘108’ ஆம்புலன்ஸ் டிரைவருக்கு மிரட்டல் விடுத்த நபரை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அருகே, ஊஞ்சவேலாம்பட்டியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், விபத்துக்குள்ளானவர்களை மீட்க, ‘108’ ஆம்புலன்ஸ் சென்றது. சாலையில் ரத்த காயங்களோடு நின்ற ஒருவரை, ‘108’ ஆம்புலன்ஸில் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளிக்க அழைத்துச் சென்றனர்.

அப்போது, அங்கு தனியார் ஆம்புல்னஸில் வந்த டிரைவரும், அங்கு இருந்த இருவரும், ‘108’ ஆம்புலன்ஸில் ஏற்ற விடாமல், தகாத வார்த்தையால் திட்டி, மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து, ‘108’ ஆம்புலன்ஸ் ஊழியர்கள், சப்–கலெக்டர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தனர். இது சம்பந்தமாக வீடியோவும் வைரலானது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், டிரைவர் முகமது பாஷா,38, மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

அவர், ஏற்கனவே, ஆம்புலன்ஸ் ஓட்டி வந்ததாகவும், தற்போது தனியார் ஆம்புலன்சுக்கு ஆதரவாக மிரட்டல் விடுத்ததும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us