ADDED : செப் 29, 2026 06:13 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளியில், இயற்கை வேளாண் கருத்தரங்கம் நடந்தது.
பாரத் பெட்ரோலியம் சார்பில், இயற்கை வேளாண் கருத்தரங்கு மற்றும் வேளாண் கண்காட்சி, ஜமீன் ஊத்துக்குளி ஸ்ரீராம் எண்டர்பிரைசஸின் வளாகத்தில் நடந்தது.
பொள்ளாச்சி எம்.எல்.ஏ., நித்தியானந்தன் தலைமை வகித்தார். ஜெயராமச்சந்திரன் வரவேற்றார். பாரத் பெட்ரோலியம் ரீடெய்ல் மேலாளர் பங்கஜ் மீனா மற்றும் பலர் பேசினர்.
ஜனாதிபதி விருது பெற்ற இயற்கை விவசாயி ஞானசரவணன், கோவா முதல்வரிடம் பரிசு பெற்ற டாக்டர் தங்கமுத்து, இயற்கை விவசாயி கார்த்திக்கேயன், வேளாண் உதவி இயக்குனர், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் பங்கேற்று, விவசாய திட்டங்கள் குறித்து பேசினர். விவசாயி யோகேஷ்வரன் நன்றி கூறினார்.
