தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ டீசலை மிச்சப்படுத்த டிரைவர்களுக்கு அறிவுறுத்தல்

 டீசலை மிச்சப்படுத்த டிரைவர்களுக்கு அறிவுறுத்தல்

 டீசலை மிச்சப்படுத்த டிரைவர்களுக்கு அறிவுறுத்தல்


ADDED : நவ 17, 2025 12:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2025 12:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: முறையாக பழுது நீக்காமை, இழுவைத்திறன் குறைவு போன்ற காரணங்கள் இருந்தும், ஒரு லிட்டர் டீசலுக்கு, 6 கி.மீ., துாரம் செல்லும் வகையில் பஸ்சை இயக்க வேண்டும், என, அதிகாரிகள் கோருவதால், அரசு பஸ் டிரைவர்கள் திணறுகின்றனர்.

அரசு போக்குவரத்துக்கழகம், பொள்ளாச்சியில் உள்ள மூன்று பணிமனைகளில் இருந்து, 200க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வழித்தடத்தில், தினமும் பஸ் சென்று திரும்பும் துாரத்திற்கு ஏற்ப, 80 முதல் 110 லிட்டர் டீசல் நிரப்பப்படுகிறது.

ஆனால், நிர்ணயிக்கப்பட்ட அளவு டீசல் பிடிக்கப்பட்டாலும், லிட்டருக்கு, 6 கி.மீ., துாரம் செல்லும் வகையில், பஸ்சை இயக்க டிரைவர்கள் நிர்பந்தம் செய்யப்படுகின்றனர்.

ஆனால், முறையாக பழுது நீக்காமல் இருப்பது, இழுவைத்திறன் குறைவு, அதிகப்படியான ஸ்டாப் மற்றும் நெரிசல் மிக்க ரோடுகளில் நின்று செல்வது போன்ற காரணங்களால், டீசலை மிச்சப்படுத்த முடியாமல், அரசு பஸ் டிரைவர்கள் திணறுகின்றனர்.

டிரைவர்கள், கண்டக்டர்கள் கூறியதாவது:

இழுவைத்திறன் குறைவால், பஸ்சை சீராக இயக்குவது சிரமம். பொள்ளாச்சி நகரில் இருந்து, 10 கி.மீ., துாரத்திற்கு மக்கள் சென்றடையும் வகையில், டவுன் பஸ்கள் இயக்கப்பட்டாலும், புறநகர் பஸ்களும் அந்தந்த ஸ்டாப்புகளில் நின்று செல்வதாலும், டீசல் பயன்பாடு அதிகரிக்கிறது.

இதேபோல, தனியார் பஸ்கள் முறையான வழித்தடத்தில் இயக்கப்படுவதும் கிடையாது. அதனால், பயணியர், தனியார் பஸ்சில் பயணிக்க ஆர்வம் காட்டுவதால், அரசு பஸ்களில் கூட்டம் இல்லாமல் வருவாய் குறைகிறது. பிரச்னைகளை முறையாக கண்டறிந்து தடுத்தால் மட்டுமே உரிய தீர்வு கிடைக்கும். இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us