/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பனிமூட்டத்தால் அவதி: ஓட்டுநர்கள் தடுமாற்றம்
/
பனிமூட்டத்தால் அவதி: ஓட்டுநர்கள் தடுமாற்றம்
ADDED : டிச 04, 2025 06:41 AM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பகுதியில் காலை நேரத்தில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில் இரு தினங்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் செல்வோர் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டு தடுமாறி சென்றனர். மேலும், கிராமப்புற ரோடுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் இருந்ததால், ஓட்டுநர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இத்துடன், காலை நேரத்தில் மக்கள் நடுங்கியபடி அன்றாட பணிகளில் ஈடுபட்டனர். 10 மீட்டர் இடைவெளியில் வரும் நபர்கள் கூட தெரியாததால், வாக்கிங் மற்றும் ஜாக்கிங் செல்வதையும் தவிர்த்தனர்.

