/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முக்கிய வீதிகளில் விபத்து அபாயம்: அலறும் வாகன ஓட்டுநர்கள்
/
முக்கிய வீதிகளில் விபத்து அபாயம்: அலறும் வாகன ஓட்டுநர்கள்
முக்கிய வீதிகளில் விபத்து அபாயம்: அலறும் வாகன ஓட்டுநர்கள்
முக்கிய வீதிகளில் விபத்து அபாயம்: அலறும் வாகன ஓட்டுநர்கள்
ADDED : அக் 29, 2025 11:39 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரின் முக்கிய வீதிகளில், மழையால் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டும், சீரமைக்கப்படாததால், வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், கடந்த வாரம் கனமழை பெய்தது. அதில், நகரின் முக்கிய வீதிகளில் உள்ள சாலைகளில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.
சில பகுதிகளில் மட்டுமே 'பேட்ச் ஒர்க்' பணி மேற்கொள்ளப்பட்டும், பயனின்றி உள்ளது. குறிப்பாக, அன்சாரி வீதி மற்றும் ஆர்.ஆர்.தியேட்டர் ரோடு சந்திப்பில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு, வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்தி வருகிறது.
இரவில் பள்ளங்களை அடையாளம் காண முடியாமல் வாகன ஓட்டுநர்கள், விபத்தில் சிக்குகின்றனர். விபத்தை தடுக்கும் விதமாக சாலையை புதுப்பிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
போக்குவரத்து நிறைந்த ரோட்டில் பெரும் பள்ளங்கள் இருப்பது கண்டறியப்பட்டால், உடனே சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் வேகமாக வரும் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்கு உள்ளாகின்றனர்.
இரவில் அதிவேகமாக வாகனங்களில் செல்வோர், பள்ளங்களைக் கண்டு, வேகத்தை குறைக்க முற்பட்டாலோ, திசை திருப்ப முயன்றாலோ விபத்து ஏற்படுகிறது. பெரும் பள்ளங்களை மூடி, சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.

