ADDED : அக் 28, 2024 11:36 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், சிகரெட் புகைத்தவாறு, டூவீலர் மற்றும் கார் ஓட்டும் நபர்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி நகரில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு, 'இ-சலான்' முறையில் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், சமீப காலமாக, 'ஹாயாக' சிகரெட் புகைத்தவாறு, டூவீலர் மற்றும் கார் ஓட்டும் நபர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஒரு கையில் சிகரெட் பிடித்தவாறு, பின்னால் வரும் வாகன ஓட்டுநர்களை பொருட்படுத்தாமல் செல்கின்றனர். கண்காணிப்பு கேமரா வாயிலாக, இத்தகைய வாகன ஓட்டுநர்களைக் கண்டறிந்து, அபராதம் விதிக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
