/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துண்டு துண்டாக கான்கிரீட் ரோடு; விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டுநர்கள்
/
துண்டு துண்டாக கான்கிரீட் ரோடு; விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டுநர்கள்
துண்டு துண்டாக கான்கிரீட் ரோடு; விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டுநர்கள்
துண்டு துண்டாக கான்கிரீட் ரோடு; விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டுநர்கள்
ADDED : ஏப் 28, 2025 04:10 AM

வால்பாறை வால்பாறை - சோலையாறு ரோட்டில், இடையிடையே ரோடு பணி பாதியில் நிறுத்தப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறையிலிருந்து சோலையாறு எஸ்டேட் செல்லும் வழியில், நல்லகாத்து எஸ்டேட் ரோடு அமைந்துள்ளது. மொத்தம், 3 கி.மீ., துாரம் உள்ள ரோடு, குண்டும் குழியுமாக இருந்ததால், பொதுமக்கள் நலன் கருதி, நகராட்சி சார்பில் கடந்த ஆண்டு கான்கிரீட் ரோடு அமைக்கப்பட்டது.
ஆனால், நல்லகாத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செல்லும் ரோட்டின் எதிரில், 100 மீட்டருக்கு ரோடு போடப்படவில்லை. இதனால், இந்த வழியாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன.
பொதுமக்கள் கூறியதாவது:
வால்பாறை வரும் சுற்றுலா பயணியர் சோலையாறு, முடீஸ் வழியாக, நல்லமுடி காட்சி முனை, நெம்பர் பாறை, மளுக்கப்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
வால்பாறையிலிருந்து சோலையாறு செல்லும் ரோட்டின் இடையிடையே ரோடு அமைக்காததால், வேகமாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. அரசு பஸ்களில் 'லீப்' கட்டாகி விடுகிறது.
குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் வருவோர், இந்த ரோட்டில் விபத்துக்குள்ளாகி தவிக்கின்றனர். நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் சுற்றுலா வாகன ஓட்டுநர்களும், உள்ளூர் மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இவ்வாறு, கூறினர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'ரோடு பணியின் போது, இரண்டு பிரிவாக செப்பணிடப்பட்டதால், சிறிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் உள்ளது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் வாயிலாக விடுபட்ட பகுதியில் விரைவில் கான்கீரீட் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.