தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சாலையெங்கும் பள்ளம் ஓட்டுநர்கள் அதிருப்தி

சாலையெங்கும் பள்ளம் ஓட்டுநர்கள் அதிருப்தி

சாலையெங்கும் பள்ளம் ஓட்டுநர்கள் அதிருப்தி


UPDATED : நவ 06, 2026 07:31 PM

ADDED : நவ 06, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:31 PM ADDED : நவ 06, 2026 05:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருட்செல்வர் மகாலிங்கம் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து, உடுமலை, பழநி, பல்லடம், திருப்பூர் மற்றும் தாராபுரம் வழித்தட பஸ்கள் மற்றும் வாகனங்கள், அருட்செல்வர் மகாலிங்கம் சாலை வழியாக செல்கின்றன.

இந்த சாலையில், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள் உள்ளதால், போக்குவரத்து நிறைந்துள்ளது. இந்நிலையில், சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

ஓட்டுநர்கள் கூறியதாவது:

பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் – பல்லடம் ரோட்டை இணைக்கும் இணைப்புச்சாலையாக அருட்செல்வர் மகாலிங்கம் சாலை உள்ளது. கான்கிரீட் சாலை பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்டது. அதன்பின், முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

அவ்வப்போது பணிகள் மேற்கொண்டாலும் மழைக்கு தாங்காமல், குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இந்நிலையில், சாலையில் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விபத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது. சாலையை புதுப்பிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us