/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோர புதரால் வாகன ஓட்டுநர்கள் அவதி
/
ரோட்டோர புதரால் வாகன ஓட்டுநர்கள் அவதி
ADDED : மே 18, 2025 10:36 PM

கிணத்துக்கடவு, ;கிணத்துக்கடவு, பட்டணம் --- கோதவாடி ரோட்டோரத்தில் அதிகளவு புதர்செடிகள் வளர்ந்துள்ளதால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள, பட்டணத்தில் இருந்து கோதவாடி செல்லும் ரோட்டில் அதிகளவு விவசாய நிலங்கள் உள்ளன. அதனால், இவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் விளைபொருட்கள் மார்க்கெட்டுக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த ரோட்டின் இரு புறமும் அதிகளவு புதர்செடிகள் வளர்ந்து, ரோட்டை ஆக்கிரமித்துள்ளன. இதனால், ரோட்டில் நடந்தது செல்லும் போது பாம்பு போன்றவை குறுக்கிடுகின்றன. மேலும், எதிரில் வாகனங்கள் வரும் போது, வாகனத்தில் ஒதுங்கி செல்லக்கூட முடியாத நிலை உள்ளது. எனவே, ரோட்டோர புதர்செடிகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி சுத்தம் செய்ய வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.