/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோர மரத்தால் வாகன ஓட்டுநர்கள் அவதி
/
ரோட்டோர மரத்தால் வாகன ஓட்டுநர்கள் அவதி
ADDED : ஜூன் 24, 2025 10:16 PM

நெகமம்; எம்மேகவுண்டன்பாளையம் ரோட்டோரம் சாய்ந்த நிலையில் இருக்கும் மரத்தால் வாகன ஓட்டுநர்கள் அச்சமடைந்துள்ளனர்.
நெகமம் அருகே உள்ள, எம்மேகவுண்டன்பாளையத்தில் இருந்து பட்டணம் செல்லும் வழியில் மக்கள் மற்றும் விவசாயிகள் செல்கின்றனர். இந்த ரோட்டின் ஓரத்தில் இருக்கும் மரம் ஒன்று ரோட்டில் விழும் நிலையில் சாய்ந்துள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் பைக் ஓட்டுநர்கள் இப்பகுதியை கடக்கும் போது அச்சத்துடன் செல்கின்றனர்.
மேலும், இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்லும் போது, மரக்கிளைகள் மீது உரசி உடைய வாய்ப்புள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி ரோட்டோரம் உள்ள மரக்கிளையை வெட்டி அகற்ற வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.