/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதமடைந்த ரோட்டில் வாகன ஓட்டுநர்கள் அவதி
/
சேதமடைந்த ரோட்டில் வாகன ஓட்டுநர்கள் அவதி
ADDED : ஜூன் 03, 2025 11:46 PM

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு, வடசித்தூர் ரோடு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு அருகே, வடசித்தூர் ஊராட்சி அலுவலகம் செல்லும் ரோட்டில் ஏராளமான கடைகள் உள்ளது. இந்த ரோட்டில் ஒரு பகுதியில் குண்டும் குழியுமாக மாறி மண் நிறைந்து காணப்படுகிறது.
மழை பெய்யும் நேரத்தில், ரோட்டில் ஏற்பட்டுள்ள குழியில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், இவ்வழியில் செல்லும் பைக் ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், காலை நேரத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் போது, வாகனங்களில் செல்வோர் தடுமாற்றம் அடைகின்றனர். இரவு நேர பயணத்தின் போது கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி இந்த ரோட்டை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.