ADDED : ஏப் 03, 2026 04:27 AM

தொண்டாமுத்தூர்: பேரூரில், பேரூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல் தமிழ் கல்லூரி சார்பில், தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இதில், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்களிப்பது குடிமக்களின் கடமை குறித்தும் கோஷங்கள் எழுப்பியும், விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
* ஒத்தக்கால்மண்டபம் பகுதியில், நூறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஊர்வலம் ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் பார்த்திபன் தலைமையில் நடந்தது. மனித சங்கிலியாக நின்று, நூறு சதவீத ஓட்டுப்பதிவு குறித்த விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன. கற்பகம் கல்லூரி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர், மாணவர்கள், பேரூராட்சி பணியாளர்கள், அலுவலர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
