தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முதல்வர் வருகை :ட்ரோன் பறக்க விட தடை

முதல்வர் வருகை :ட்ரோன் பறக்க விட தடை

முதல்வர் வருகை :ட்ரோன் பறக்க விட தடை


UPDATED : செப் 29, 2026 04:38 PM

ADDED : செப் 29, 2026 04:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 29, 2026 04:38 PM ADDED : செப் 29, 2026 04:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தாராபுரம் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய, தமிழக முதல்வர் விஜய் இன்று வருகிறார். கோவை விமான நிலையத்தில், கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். பின் காரில் சாலை மார்க்கமாக தாராபுரம் செல்கிறார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் ட்ரோன் உள்ளிட்ட ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாவட்ட எல்லையில் கரியாம்பாளையம் சந்திப்பு, நீலாம்பூர் புறக்காவல் நிலையம், கணியூர் டோல்கேட், கருமத்தம்பட்டி நால்ரோடு, சோமனூர் ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பகுதிகளும்; மாநகரில் கொடிசியா, பீளமேடு, சிட்ரா, நேருநகர், இருகூர், எஸ்.எச்.ஐ.எஸ்.,காலனி, ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், ஹோப்ஸ் கல்லூரி, சின்னியம்பாளையம் மற்றும் சுற்றுப்பகுதிகளும் தற்காலிக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் அக். 1 அதிகாலை 1:00 மணி வரை, 48 மணி நேரத்துக்கு ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us