/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரவில் பறக்கும் டிரோன்; கிராம மக்கள் குழப்பம்
/
இரவில் பறக்கும் டிரோன்; கிராம மக்கள் குழப்பம்
ADDED : ஜன 29, 2025 10:30 PM
சூலுார்; இரவு நேரத்தில் டிரோன்கள் பறப்பதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட போகம்பட்டி பொன்னாக்கானி, இடையர் பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில், 10: 00 மணிக்கு மேல், டிரோன்கள் பறப்பதை மக்கள் பார்த்துள்ளனர். இரவு நேரத்தில் டிரோன்கள் பறப்பது, கிராம மக்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட மெட்டுவாவி பகுதியில் சிப்காட் அமைய உள்ளது. அதற்காக டிரோன் மூலம் சர்வே பணி நடப்பதாகவும் மக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில்,' சுல்தான்பேட்டை பகுதிக்கு உட்பட்ட போகம் பட்டி, இடையர் பாளையம், சின்னக்குயிலி பகுதிகளில் கல் குவாரிகள் செயல்படுகின்றன. அவற்றில் இருந்து இரவில் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுகிறதா என, கனிம வளத்துறையினர் டிரோன் மூலம் இரவு நேரத்தில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்,' என்றனர்.

