/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
48 மணி நேரம் டிரோன்கள் பறக்க தடை
/
48 மணி நேரம் டிரோன்கள் பறக்க தடை
ADDED : பிப் 13, 2026 05:01 AM
கோவை: கடந்த 1998 பிப். 14ம் தேதி கோவையில் குண்டுகள் வெடித்தன. பலர் உயிரிழந்தனர். ஆண்டு தோறும் பிப். 14 குண்டு வெடிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பிப். 15ம் தேதி ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி கொண்டாட்டத்தில் பங்கேற்க ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட முக்கிய பிரமுகர்கள் வர உள்ளனர்.
இதை முன்னிட்டு, சிங்காநல்லுார், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, சின்னியம்பாளையம், நேரு நகர், சிட்ரா, பீளமேடு, லட்சுமி மில்ஸ், ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ், செல்வபுரம், காந்திபுரம், வீரகேரளம், சாய்பாபா காலனி, வடவள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் தற்காலிகமாக,'ரெட் ஜோன்' ஆக அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த பகுதிகளில் இன்று இரவு முதல், 15ம் தேதி வரை டிரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

