ADDED : பிப் 19, 2026 06:02 AM

அ நிறம் | அளவு
கோவை: கோவை வனக்கோட்டத்தைச் சேர்ந்த முன் களப்பணியாளர்களுக்கு, டிரோன் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிய யானைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் சார்பில், கோவை மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் நடந்த பயிற்சியை உதவி வனப்பாதுகாவலர் சைதன்ய மாதவ் துவக்கி வைத்தார்.
25 வனவர், வனக்காப்பாளர்கள் பயிற்சி பெற்றனர். யானைகள் பாதுகாப்புக்கும், மனித - வனவிலங்கு மோதலை தடுக்கவும் டிரோன்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
