/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்
ADDED : பிப் 05, 2025 12:57 AM

கோவை; மைலேரிபாளையம் பிரிவில் அமைந்துள்ள, கோயம்புத்துார் கடல்சார் கல்லுாரியில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
செட்டிபாளையம் காவல் நிலைய எஸ்.ஐ., கருப்புசாமி பாண்டியன் கொடியசைத்து மாரத்தானை துவக்கி வைத்தார்.
ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் நடந்த மினி மாரத்தானில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கல்லுாரி இயக்குனர் செந்தில் குமார், முதல்வர் கவுசிக்தாஸ் குப்தா, துணை முதல்வர் ராம்பாபு, வேலை வாய்ப்புத்துறை இயக்குனர் கோபாலகிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர் செபாஸ்டியன் மற்றும் பேராசிரியர் சுரேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.