/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஆக 08, 2025 09:21 PM

தொண்டாமுத்தூர்; பேரூர் போலீசார் மற்றும் பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியின் போதை தடுப்பு மன்றம் சார்பில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
கல்லூரி வளாகத்தில் துவங்கிய இப்பேரணியை, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி, சிறுவாணி மெயின் ரோடு, பேரூராட்சி அலுவலகம், வடக்கு ரத வீதி வழியாக சென்று, கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.
இதில், போதைப்பொருட்களை பயன்படுத்துவதால், ஏற்படும் விளைவுகள் குறித்து, பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், பேரூர் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.