/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை பொருள் ஒழிப்பு ரங்கோலி ஓவிய போட்டி
/
போதை பொருள் ஒழிப்பு ரங்கோலி ஓவிய போட்டி
ADDED : ஜூலை 08, 2025 09:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவைபுதுார், 100 அடி ரோட்டிலுள்ள, 'ஏ' மைதானத்தில் போதை பொருட்களை ஒழிப்பது தொடர்பாக, 'போதை பொருள் இல்லா தமிழகம்' என்ற பெயரில், ரங்கோலி ஓவியம் மற்றும் ஓவிய போட்டி நடந்தது.
50க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் வரைந்த, போதை பொருள் ஒழிப்பு குறித்த ஓவியங்கள் இடம்பெற்றன. குழந்தைகளின் பொதுவான ஓவியங்கள், கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. நான்கு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இதில், பிரிவு வாரியாக சிவன்யா, பூவிதழ் வியங்கா, வேதாந்த், பிரகதி, சுதர்சனா, தேவதர்ஷினி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.

