/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : நவ 17, 2025 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சொக்கனுார் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்கவுண்டனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், கிணத்துக்கடவு போலீஸ் எஸ்.ஐ., சந்தனகருப்பு மற்றும் போலீஸ் ரவி பங்கேற்று, பள்ளி மாணவர்களிடையே போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், அதன் பாதிப்புகள் மற்றும் போக்சோ பற்றிய தகவல்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி, பி.டி.ஏ., தலைவர் திருநாவுக்கரசு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

