/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை விழிப்புணர்வு குறும்படம்: வேளாண் பல்கலை அணி வெற்றி
/
போதை விழிப்புணர்வு குறும்படம்: வேளாண் பல்கலை அணி வெற்றி
போதை விழிப்புணர்வு குறும்படம்: வேளாண் பல்கலை அணி வெற்றி
போதை விழிப்புணர்வு குறும்படம்: வேளாண் பல்கலை அணி வெற்றி
ADDED : நவ 17, 2025 01:38 AM
கோவை: தமிழக அரசின் போதைப்பொருள் தடுப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக, தமிழக காவல்துறையின் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு சார்பில், போதைப்பொருள் விழிப்புணர்வு குறும்பட போட்டி நடந்தது.
மாநில அளவிலான, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இப்போட்டியில், தமிழ்நாடு வேளாண் பல்கலை வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் 8 அணிகளாக பங்கேற்றனர்.
இளங்கலை தொழில்நுட்பம் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பிரிவு மாணவர்களில், நான்கு அணிகள் மாநில அளவில் முதல் 25 இடங்களைப் பிடித்தன.
விக்னேஷ், சிபி ஆகியோர் அணி 3வது இடம் பிடித்தது. இந்த அணிக்கு, ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன. மற்ற 3 அணிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
சென்னையில் நடந்த விழாவில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி., அமல்ராஜ், பரிசுகளை வழங்கினார்.
போதை இல்லா தமிழ்நாடு என்ற இலக்கை எட்ட விழிப்புணர்வு குறும்படம் உருவாக்கிய மாணவர்களை, பல்கலை துணைவேந்தர் (பொ), தமிழ்வேந்தன் பாராட்டினார்.

