/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூர் செட்டிபாளையத்தில் நடந்த சித்தர்கள் மாநாடு
/
பேரூர் செட்டிபாளையத்தில் நடந்த சித்தர்கள் மாநாடு
பேரூர் செட்டிபாளையத்தில் நடந்த சித்தர்கள் மாநாடு
பேரூர் செட்டிபாளையத்தில் நடந்த சித்தர்கள் மாநாடு
ADDED : நவ 17, 2025 01:38 AM

தொண்டாமுத்தூர்: அகில இந்திய சர்வ சித்தர்கள் கூட்டமைப்பு சார்பில், இரண்டு நாள் சித்தர்கள் மாநாடு, பேரூர் செட்டிபாளையத்தில் நடந்தது.
கோ பூஜையுடன் மாநாடு துவங்கியது. இதில், அஸ்வ பூஜை, கணபதியாகம், வராகி யாகம் நடந்தது. தொடர்ந்து, பாரம்பரிய நிகழ்ச்சி, சித்தர்களின் யோகா மற்றும் தியானம், சொற்பொழிவு உள்ளிட்டவை நடந்தன.
இம்மாநாட்டில், ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசுகையில், சித்தர்களின் பூஜை பசுமாட்டில் இருந்து தான் துவங்குகிறது. பசு ரத்தம் கீழே சிந்தக்கூடாது என்பதுதான் சனாதனம். சித்தர்கள் இங்கு கூடியிருப்பது, பசுமாட்டை பாதுகாக்கவும், காவி கொடி பறக்க வேண்டும் என்பதற்காகவும் தான், என்றார்.
எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், காமாட்சிபுரி ஆதினம் ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வரர் சுவாமிகள், நாகசக்தி பீடம் பாபுஜி சுவாமிகள் மற்றும் ஏராளமான சன்னியாசிகள் கலந்து கொண்டனர்.

