/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் போதை மாத்திரைகள் பறிமுதல்
/
கோவையில் போதை மாத்திரைகள் பறிமுதல்
ADDED : மார் 29, 2025 06:15 AM

போத்தனூர்: கோவையில், போதை பயன்பாட்டுக்கான, 3000 மாத்திரைகளுடன் ஒருவரை, போலீசார் கைது செய்தனர்.
போத்தனூர் போலீஸ் எஸ்.ஐ., ராமர் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மாலை, போத்தனூர், 4-ம் நம்பர் பஸ் திருப்பம் அருகே ரோந்து சென்றார்.
அங்கு, சந்தேகத்திற்கிடமாக பையுடன் நின்றிருந்தவரை விசாரித்தனர். அவர் வெள்ளலூர், அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த, அப்துல் ரஹ்மானின் மகன் அபுதாகீர், 35 என தெரிந்தது.
அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, போதைக்காக பயன்படுத்தும் டேப்பன்டடால் மாத்திரைகள், 3,000 இருந்தன. மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், அபுதாகீரை கைது செய்தனர். எஸ்.ஐ.,ராமர் புகாரின்படி, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.