/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு
/
கல்லுாரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஆக 07, 2025 09:12 PM

வால்பாறை; வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் போதை பொருள் தடுப்பு மன்றம் சார்பில், புகையிலை மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடந்தது. நிகழ்ச்சிக்கு முதல்வர் ஜோதிமணி தலைமை வகித்தார்.
கல்லுாரி போதை பொருள் தடுப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் செல்வசேகர் வரவேற்றார். புகையிலை மற்றும் போதை பொருள் தடுப்பு மாவட்ட ஆலோசகர் சரண்யாதேவி பேசும் போது, ''கல்லுாரி மாணவர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மனதில் தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் தரக்கூடாது. குறிப்பாக, இளம் வயதில் போதை பொருட்களை பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.
சாதிக்க வேண்டிய வயதில் மாணவர்கள் தீய வழியில் செல்லக்கூடாது,'' என்றார். கல்லுாரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் நன்றி கூறினார்.