ADDED : ஆக 28, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையத்தில், யுவா பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடந்தது.
பள்ளியில், இந்தியன் கல்வி அறக்கட்டளை சார்பில், ஜோதிபுரம் பிரம்ம குமாரிகள் ராஜயோக தியான மையம் சார்பில், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி, பேச்சு, உரையாடல் மற்றும் பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் மனம் மற்றும் உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள், சமுதாயத்தில் உருவாகும் விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் குறித்து விளக்கப்பட்டன. பள்ளியின் தலைவர் சண்முகம், தாளாளர் சத்யா, பள்ளி முதல்வர் சாகுல் மீரான், துணை முதல்வர் சுருதி உட்பட பலர் பங்கேற்றனர்.
