/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
/
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 27, 2025 10:01 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பொள்ளாச்சி உட்கோட்ட போலீஸ் மற்றும் பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி, மகாலிங்கபுரம் ஆர்ச் அருகே துவங்கியது. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகன், சந்திரலேகா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்றனர். பேரணியானது, காந்திசிலை, பஸ்ஸ்டாண்ட் வழியாக சென்று காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.
கல்லுாரி மாணவர்கள், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
* கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து பேச்சு, நாடகம் மற்றும் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. பொருளியல் ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். தமிழ் ஆசிரியர் சாவித்திரி விழாவை தொகுத்து வழங்கினார்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோட்டூர் போலீஸ் எஸ்.ஐ., ராமச்சந்திரன் பரிசு வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் ராஜலட்சுமி இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார். வணிகவியல் ஆசிரியர் சிவசுப்ரமணியம் நன்றி கூறினார்.
உடுமலை
புங்கமுத்துார் காந்திகலா நிலையம் மேல்நிலைப்பள்ளியில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு வார விழா, தலைமையாசிரியர் செந்தில்வேல் தலைமையில் நடந்தது. மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, வாசகங்கள் எழுதும் போட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி செயலாளர் திருமலைசாமி பரிசு வழங்கினார்.
மாணவர்கள், போதைபொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர். ஆசிரியர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் யுகாஷ் நன்றி கூறினார்.