/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை பொருள் தடுப்பு கருத்தரங்கு
/
போதை பொருள் தடுப்பு கருத்தரங்கு
ADDED : செப் 17, 2025 09:50 PM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பயனீர் கலை, அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டமும், போதைப்பொருள் பயன்பாட்டு தடுப்பு குழுவும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளர் பீமராஜ் வரவேற்றார். நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன் தலைமை வகித்து கருத்தரங்கை தொடங்கி வைத்தார். காவல் நிலைய உதவி ஆய்வாளர் நசிமா பேகம், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்றனர்.
உதவி பேராசிரியர் புனிதவதி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.