
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்; நெகமம் போலீஸ் சார்பில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி, பொள்ளாச்சி ஏ.எஸ்.பி., சிருஷ்டி சிங் தலைமையில் நடந்தது.
நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர், வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடையே ஏ.எஸ்.பி., விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பேரணியானது, அறம் பப்ளிக் பள்ளியில் இருந்து நாகர் மைதானம், நெகமம் பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்றது.