sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 போதைப் பொருட்கள் விற்பனை புறநகர் பகுதிகளில் அதிகரிப்பு

/

 போதைப் பொருட்கள் விற்பனை புறநகர் பகுதிகளில் அதிகரிப்பு

 போதைப் பொருட்கள் விற்பனை புறநகர் பகுதிகளில் அதிகரிப்பு

 போதைப் பொருட்கள் விற்பனை புறநகர் பகுதிகளில் அதிகரிப்பு


ADDED : ஜன 11, 2026 05:09 AM

Google News

ADDED : ஜன 11, 2026 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்: போலீசார் ரோந்து மற்றும் நடவடிக்கை குறைந்ததால், கோவை மாவட்ட புறநகர் பகுதிகளில், கஞ்சா மற்றும் போதை பவுடர் விற்பனை மீண்டும் அதிகரித்துள்ளது.

சமீப காலமாக, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் போதை பழக்கவழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, கல்வியை விட்டு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் அதிக அளவில் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.

இதனால், இளைஞர்களை குறி வைத்தே போதைப்பொருள் விற்பனை அதிகளவில் நடந்து வருகிறது. இதன் விளைவாக, பல்வேறு வன்முறை சம்பவங்களில் போதைக்கு அடிமையானவர்கள் ஈடுபடுவது, போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை மாவட்ட ரூரல் போலீசார் சார்பில், போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க, புறநகர் பகுதிகளில், சில மாதங்களுக்கு முன் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் தங்கும் இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி, போதைப்பொருட்கள், ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். அத்தோடு சரி. கண்காணிப்பும், ரோந்தும் குறைந்து போனது.

இதன் காரணமாக, கோவை மாவட்ட புறநகர் பகுதிகளில், மீண்டும் கஞ்சா, போதை பவுடர், போதை ஸ்டாம்ப் போன்ற போதை பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ளது.

குறிப்பாக, புறநகரில் உள்ள கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து, போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. போலீசார் மீண்டும், போதை பொருள்களுக்கு எதிரான தங்களின் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us