/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை மாத்திரைகள் கடத்தல்; நான்கு பேர் சிறையிலடைப்பு
/
போதை மாத்திரைகள் கடத்தல்; நான்கு பேர் சிறையிலடைப்பு
போதை மாத்திரைகள் கடத்தல்; நான்கு பேர் சிறையிலடைப்பு
போதை மாத்திரைகள் கடத்தல்; நான்கு பேர் சிறையிலடைப்பு
ADDED : ஏப் 07, 2025 05:38 AM
கோவை; விற்பனைக்காக போதை மாத்திரைகளை கடத்திய நான்கு பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை மற்றும் சுற்றுவட்டாரத்தில் போதை மாத்திரைகள், போதை வஸ்துகள் கடத்தல், விற்பனை குறித்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்யும் நபர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை காந்திபுரம் அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அருகே உள்ள பொதுக்கழிப்பறை பகுதியில் போதை மாத்திரைகளுடன் சிலர் இருப்பதாக மதுவிலக்கு அமலாக்க துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த நான்கு பேரை பிடித்து சோதனையிட்டதில், அவர்களிடம் தடை செய்யப்பட்ட போதை மருந்தான மெத்தாபெட்டமைன் இருப்பது தெரிந்தது.
விசாரணையில், அவர்கள், கோவை புலியகுளம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த கோபிநாத், 24, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடக்காராவை சேர்ந்த மிதுலஜ், 25, வள்ளிக்காட்டை சேர்ந்த விக்னேஷ், 24, ஆலப்புழா மாவட்டம் சந்தானபுரத்தை சேர்ந்த அஜீத், 25 எனத் தெரிந்தது.
வெளிமாநிலத்தில் இருந்து மெத்தாபெட்டமைனை வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்ய திட்டமிட்டது தெரிந்தது. அவர்களை சிறையில் அடைத்த போலீசார் அவர்களிடம் இருந்து, 195 கிராம் மெத்தாபெட்டமைன், ஒரு டிஜிட்டல் எடை எந்திரம், ரூ.15 ஆயிரம், நான்கு மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.

