/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை பொருள் கடத்தல் வழக்கு; கேரள ஆசாமிக்கு 15 ஆண்டு சிறை
/
போதை பொருள் கடத்தல் வழக்கு; கேரள ஆசாமிக்கு 15 ஆண்டு சிறை
போதை பொருள் கடத்தல் வழக்கு; கேரள ஆசாமிக்கு 15 ஆண்டு சிறை
போதை பொருள் கடத்தல் வழக்கு; கேரள ஆசாமிக்கு 15 ஆண்டு சிறை
ADDED : ஆக 11, 2025 11:29 PM

கோவை; மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் கடத்திய கேரள ஆசாமிக்கு, 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், மசினகுடி போலீசார் 2022, மே 13ல், கக்கனல்லா சோதனை சாவடியில், வாகன சோதனை நடத்தினர். கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த, கேரள பதிவு எண் கொண்ட காரை தடுத்து நிறுத்தினர்.
காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடினார். காரை சோதனையிட்ட போது, 100 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் என்ற உயர்ரக சிந்தடிக் போதை பொருள் கடத்தியது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிந்து, தப்பி ஓடிய ஆசாமியை தேடி வந்தனர். இந்நிலையில், மே 21ல், கூடலூர் தேவர் சோலை ரோட்டில், சோதனையிட்ட போது, ஏற்கனவே தப்பி ஓடிய ஆசாமி சிக்கினார். அவரிடமிருந்து மேலும், 15 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில், போதை பொருள் கடத்தியது கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்த அஜ்மல்,26, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து, கோவை இன்றியமையா பொருட்கள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றம் சாட்டப்பட்ட அஜ்மல்லிற்கு, 15 ஆண்டுசிறை, 1.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் சிவகுமார் ஆஜரானார்.