/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை பொருள் மோசமானது; மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
போதை பொருள் மோசமானது; மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 22, 2025 10:50 PM

கோவை; அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அனைத்து அரசு பள்ளிகளிலும் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, அரசூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், போதைப்பொருட்களால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் மற்றும் சமூகப் பிரச்னைகள் குறித்து, 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விரிவாக விளக்கப்பட்டது. போதைப்பொருட்களுக்கு எதிராக மாணவ மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பள்ளித் தலைமையாசிரியர் கண்ணன், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அனுராதா, சூலூர் வட்டாரக் கல்வி அலுவலர் முத்துராஜ், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

