ADDED : ஜன 14, 2026 05:23 AM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் விலை, 220 ரூபாயை எட்டியுள்ளது.
மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில், முருங்கைக்காயின் விலை ரூ.230 முதல் ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டது. அதன் பின் விலை குறைந்து ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது.
விலை அதிகம் என்பதால் முருங்கைக்காய் வாங்க மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இதனிடையே நேற்று முருங்கைக்காய் விலை மீண்டும் உச்சம் தொட்டது.
ஒரு கிலோ ரூ.220க்கு விற்பனை செய்யப்பட்டது. பனிக்காலம் என்பதால் முருங்கைக்காய் வரத்து இல்லாததே விலை உயர்வுக்கு காரணம்.
