ADDED : மார் 11, 2026 05:40 AM
அ நிறம் | அளவு
கோவை: சரவணம்பட்டி, சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன்,32; வெல்டர். அதேபகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு கடந்த 8ம் தேதி இரவு 8:30 மணிக்கு சென்றார். அப்போது உன்னிகிருஷ்ணனுக்கு அறிமுகமான கார்த்திக் என்பவர், அன்னுாரை சேர்ந்த விஷ்ணு,27, என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
உன்னிகிருஷ்ணன் அங்கு சென்றபோது விஷ்ணு தகாத வார்த்தைகளால் பேசியதுடன், மது பாட்டிலால் தலை, கை, கால்களில் தாக்கியுள்ளார். காயமடைந்தவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் விஷ்ணுவை கைது செய்தனர்.
